தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க ஐகோர்ட் கிளை மறுப்பு .: வழக்கு ஜூலை 8-ம் தேதியில் மீண்டும் விசாரணை

சென்னை: தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது அந்த மேல்முறையீட்டில், இடைக்கால தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் 13 மாவட்டங்களில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. டெட் தேர்ச்சி பெற்றவர்கள், தகுதியான ஆசிரியர்களே தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே? தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளனர்.  …

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு