தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

 

தர்மபுரி, அக்.7: தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் மாவட்டம் முழுவதும், 222 மிமீ மழை பெய்தது. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில், 195.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது. இம்மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: பாலக்கோடு 25.2, மாரண்டள்ளி 15, பென்னாகரம் 37.2, ஒகேனக்கல் 52.4, அரூர் 37.4, பாப்பிரெட்டிப்பட்டி 45, மொரப்பூர் 10 என மொத்தம் 222.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்