தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி 6ம் வார்டு சிகாமணி ஆசிரியர் தெரு, குணசீலன் ஆசிரியர் தெரு, அரசு பள்ளி எதிரில் உள்ள ப.ச.தெரு, வண்ணார் ஓடைத்தெரு, பிகேஆர் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் குணசீலன் ஆசிரியர் மற்றும் பிஆர்ஆர்கே தெருக்களில் சாலைகள் பராமரிப்பின்றி படு மோசமாக உள்ளன. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால், மழைக்காலங்களின்போது கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகிறது. பிஆர்ஆர்கே தெருவில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கு பேரூராட்சி சார்பில் 1 மாதத்துக்கு முன்பு தரைப்பாலம் உடைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் உடைக்கப்பட்ட பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இப்பகுதிமக்கள் நலன் கருதி உடைக்கப்பட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும். 6ம் வார்டுக்குட்பட்ட தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாருவதுடன், தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. …

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை