தரநிலைகள், மதிப்பீடு பதிவேற்றம் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளின்

வேலூர், செப்.9: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தரநிலைகள், மதிப்பீடு குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் பள்ளி தரநிலைகள் மற்றும் மதிப்பீடு தொடர்பான தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு தலைமை தாங்குகிறது. பள்ளி மதிப்பீட்டின் நிலையான மற்றும் நிறுவன மயமாக்கப்பட்ட முறையை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பள்ளிகளையும் சென்றடைவதை இந்த திட்டம் வெளிப்படுத்துகிறது. இந்த பள்ளி மதிப்பீட்டு நடைமுறைகள் பற்றிய சான்றுகள் அடிப்படையிலான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஆய்வுகளுக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. இத்திட்டம் 2016-17ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு பள்ளியும் சுய மற்றும் வெளிப்புற மதிப்பீட்டை முடிக்க வேண்டும். அதன்படி 2016-17, 2018-19, 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய கல்வியாண்டில் மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பள்ளிகளின் சுயமதிப்பீடு முடிந்து, தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 2022-23ம் ஆண்டிற்கான சுய மதிப்பீட்டு செயல்முறையை முடிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி தரநிலைகள் மற்றும் மதிப்பீட்டு குறித்து இணைய போர்ட்டல் வரும் 30ம் தேதி வரை இருக்கும். எனவே 2022-23 ஆம் ஆண்டிற்கான சுய மதிப்பீட்டு செயல்முறையை குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன்னதாக முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று சமக்ரா ஷிக்‌ஷா திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது

குன்றத்து மலை மீது சோலார் மின் விளக்கு

மேலூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்