தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் அரசு தொடக்க பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

செம்பனார்கோயில், ஜூன்25: தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் அரசு தொடக்க பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளியில் மாதாந்திர பள்ளி மேலான்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலான்மைக் குழு தலைவர் கற்புக்கரசி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேசாக் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் வரவேற்று பேசினார். இதில் பள்ளி வளர்ச்சிக்கும், அரசு மாணவர்களுக்கு வழங்கும் திட்டங்களை குறித்தும் மாணவர்களின் பெற்றோர்களுடன் உரையாடல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மதிய உணவு, பாடக புத்தகங்கள், பள்ளி சீருடைகள் வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் சேர்ப்பதால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் தலைமை ஆசிரியர் இளங்கோவன் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் தங்கள் பகுதிகளில் சுற்றியுள்ள பெற்றோர்களுக்கு, அரசுப் பள்ளியில் சேர்ந்து பயின்றால் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்களை குறித்தும், அரசு வழங்கும் சலுகைகளை குறித்தும் விளக்கம் அளித்தார். இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி ஆசிரியர் ராஜகலா நன்றி கூறினார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்