தம்பதி வீட்டில் பதுக்கி வைத்த 4 செம்மரக்கட்டைகள் பறிமுதல் குடியாத்தத்தில் திடீர் பரபரப்பு திருட்டு வழக்கில் கோவை போலீஸ் விசாரணை

குடியாத்தம், மார்ச் 7: குடியாத்தத்தில் திருட்டு வழக்கில் கோவை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தம்பதி வீட்டில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் 4 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகரில் ராஜா(45), அவரது மனைவி ராணி(40) ஆகியோர் வனத்துறை அலுவலகம் செல்லும் வழியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையதாக கோவை போலீசார் நேற்று ராஜா, ராணியை காந்தி நகரில் உள்ள அவர்களது வீட்டில் கைது செய்து விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச்சென்றனர். இந்நிலையில் இவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாக குடியாத்தம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடியாத்தம் வன ரேஞ்சர் வினோபா தலைமையிலான வனத்துறையினர் ராஜா வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 4 செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. பின்னர் 4 செம்மரக்கட்டைகள் மற்றும் ரம்பங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, தனிப்பிரிவு தலைமை காவலர் அரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை