தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு நாளை மறுநாள் மாலை அணிவித்தல் நிகழ்ச்சி.! அமைச்சர்கள் பங்கேற்பு

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல்,  இளங்கோவைப்  போல் பூமிதனில் யாங்கணுமே  கண்டதில்லை என்று பாரதியாரால் புகழப்பெற்ற  முப்பெரும் புலவர்களுள் ஒருவர் இளங்கோவடிகள். இளங்கோவடிகள் சேர வேந்தன் சேரலாதனின்  இளையமகன்;  மூத்தவன்  சேரன்  செங்குட்டுவன்.  இவர்  இளவரசன் ஆதலால்  இளங்கோ என  அழைக்கப்பட்டார்;  துறவு  பூண்டதால் அடிகள் என்ற  சிறப்புப் பெயருடன் இளங்கோ அடிகள் எனச் சிறப்பிக்கப் பெற்றார். இவர் துறவு பூண்டதற்கான  காரணத்தை அடிகளே வரந்தரு காதையில் குறிப்பிடுகிறார்; சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா நடத்திய போது, தெய்வமாகிய கண்ணகி தேவந்தி மேல் வந்து தோன்றி அங்கு வந்திருந்த இளங்கோவடிகளை நோக்கி அவரது உயர் பண்பைப்  பாராட்டிப்  பேசுகிறாள். அதுமட்டுமன்றி, இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றாலும், அவர் எல்லாச் சமயத்தையும் சமமாக மதித்தவர். எவ்விடத்தும் அவர் சமயக்  காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியதில்லை.  பிற  சமயத்தை,  சமயத்தினரைப் பழித்ததில்லை.     இத்தகைய சிறப்பு மிக்க இளங்கோவடிகளைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்தும், மலர்தூவியும் சிறப்புச் செய்யப்படுகிறது. அவ்வகையில் இவ்வாண்டு 24.04.2022 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள இளங்கோவடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து  மலர்தூவிச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர், மாண்புமிகு துணை மேயர், சீர் பெருமக்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் கலந்துகொள்ள  உள்ளனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்