சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளுக்கு எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …