தமிழ்நாட்டோடு காரைக்காலை இணைப்போம்: போஸ்டர்களால் பரபரப்பு

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை புதுச்சேரி அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக பொதுமக்களிடம் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. அரசு பணி, விழாக்கள், சாலை வசதி என எந்த ஒரு நல திட்டங்களையும் புதுச்சேரி அரசு காரைக்காலுக்கு செய்து தர முன் வரவில்லை என காரைக்கால் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காரைக்கால் கலெக்டர் அலுவலக சுவர் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. காரைக்காலை தமிழ்நாட்டுடன் இணைப்போம் போராட்டக்குழு என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் அசிங்கம்! அவமானம்!! வெட்கம்!! புதுவை அரசே..? நாங்கள்… என்ன அனாதைகளா…! காரைக்கால் மக்களுக்கு எவ்வித அரசு நலத்திட்டங்களும் அனைத்தும் வழங்காத புதுவை அரசை நாங்கள் புறக்கணிக்கின்றோம். காரைக்காலை தமிழ்நாட்டோடு இணைப்போம். பொது வாக்கெடுப்பு நடத்த புதுவை அரசே தயாரா என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இதனால் காரைக்கால் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. போஸ்டர்களை யார் ஒட்டியது என்று காரைக்கால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்