தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து திருமருகல் பகுதி விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி உழவு பணி செய்யலாம்

நாகப்பட்டினம், மே 17: கோடை மழையை பயன்படுத்தி திருமருகல் பகுதி விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தெரிவித்துள்ளார். திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்கிறது. எனவே தற்போது விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உழவு பணிகள் மேற்கொள்ள சரியான நேரம் ஆகும். நில சாகுபடி இயற்கை உணவு மேற்கொள்ளுதல் ஒரு முக்கியமான தொழில் நுட்பமாகும். திருமருகல் ஒன்றிய பகுதியில் காய்கறி, பருத்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

பல்வேறு நன்மைகள் பெற கோடை பருவத்தில் உழவு செய்ய வேண்டும். இந்த உழவு மேற்கொள்ளுவதால் நிலத்தில் மழைநீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். நன்மை தரும் உயிரினங்களின் நெருக்கம் அதிகரிக்கும். மேலடுக்கு மண் இறுக்கத்தை தளர்த்தி மழைநீர் உள்ளே புகும் திறனை மேம்படுத்துகிறது எனவே சேகரிக்கப்பட்ட மழைநீர் பயிர்களுக்கு வறட்சியை தாங்கி வளர உதவுகிறது.

நிலத்தின் அடியில் உள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. அத்துடன் அந்த புழுக்கள் பறவைகளுக்கும் உணவாகுகிறது. இதனால் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது. களை செடிகளின் வேர்கள் அறுக்கப்பட்டு காய்ந்து விடுகின்றன. மண் இலகுவாகி அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு உரம் சமச்சீராக கிடைக்கும்.அத்துடன் மகசூலும் அதிகரிக்கும் எனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவு பணிகளை மேற்கொண்டு பயன் அடையலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்