தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற முதல்வர் சபதம் எடுத்து செயல்படுகிறார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, ஜூன் 18: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணா வரவேற்றார். கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பங்கேற்றார். எம்எல்ஏ மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர். செட்டிநாடு பள்ளி தலைவர் குமரேசன் வாழ்த்துறை வழங்கினார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றி காட்ட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சபதம் ஏற்று அதற்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். விளையாட்டுத்துறையில் சாதனைகளை குறுகிய காலத்திற்குள் பெற்றுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து 60 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 6 மாதத்தில் செய்துள்ளார்.

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. இப்போட்டியில் பங்கேற்க 13,500 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 7500 பேர் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள், மாநில போட்டியில் வெற்றி பெற்று முதல்வரிடம் பரிசு பெற வேண்டும். உயர்தரமாக கல்வியை செட்டிநாடு பப்ளிக் பள்ளி வழங்கி வருவது பாராட்டக் கூடியது. மாணவர்கள் புத்தக புழுவாக இல்லாமல் அனைத்து விதமான திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தொழிலதிபர் படிக்காசு, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் ஆனந்த், நெடுஞ்செழியன், குன்றக்குடி சுப்பிரமணியன், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி, ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். செட்டிநாடு பப்ளிக் பள்ளி துணைத்தலைவர் அருண்குமார் நன்றி கூறினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்