தமிழ்நாட்டில் புதிதாக 70 கூட்டுறவு மருந்தகங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் அரசு நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் புதிதாக 70 கூட்டுறவு மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 303 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு மருந்தகங்களில் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, குமரி உள்ளிட்ட இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அலுவலக கட்டடத்தை போக்குவரத்துத்துறை சார்பில்  காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்