தமிழ்நாட்டில் படிப்படியாக மது விலக்கு, முதியோர் ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்துதல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை

சென்னை : சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மத்தியகுழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் வெளியிட்டனர் .இந்நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் சண்முகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபரிடம் கூறியதாவது:  ‘அதிமுக பாஜக கூட்டணியை முற்றாக முறியடித்திட களம் காண வேண்டியது அனைத்து தமிழக மக்களின் கடமையாகும்.இதனை நிறைவேற்றும் நோக்கோடு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடுகிறது .தமிழக மக்களின் நலன் காக்க அயராமல் களத்தில் நின்று போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று போட்டியிடுகிறது .இத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் சட்டமன்றத்தில் இடம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு தேர்தல் அறிக்கையை தமிழக வாக்காள முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமர்ப்பிக்கிறது .இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து பிரச்சினைகளையும் நிறைவேற்ற சட்டமன்றத்தில் உறுதியுடன் போராடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் ஆளுநர் பதவிகள் அவசியம் என கருதும் பட்சத்தில் சர்க்காரியா கமிஷன் வழிகாட்டுதல் அடிப்படையில் முதல்வரால் முன்மொழிந்த மூன்று நபர்கள் ஒருவரை ஆளுநராக மத்திய அரசு நியமிக்க வலியுறுத்துவோம்.பெண்களுக்கு சட்டமன்றம் பாராளுமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம். 60 வயதை கடந்த விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அனைத்து முதியோருக்கும் முதியோர் ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.தமிழ்நாட்டில் படிப்படியாக மது கடைகள் மூடப்பட்டு மது விலக்கை அமலாக்க வலியுறுத்துவோம். இந்திய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சி அதிகப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆயுஷ் மருத்துவ முறைகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும் போன்று 50 வகையானவை தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது,’ என்று கூறினார். …

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம்: திமுக அறிவிப்பு

“நான் முதல்வன்” என இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’ :ஜேஇஇ தேர்வில் சாதித்த மாணவர்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை வரும் 17ம் தேதி தென்காசியில் இருந்து தொடங்குவதாக சசிகலா அறிவிப்பு!!