தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளை திரும்ப அழைக்க குழு

கொழும்பு: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டு போரின் போது ஒரு லட்சம் அப்பாவி தமிழகர்கள் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கானோர்  வீடு, உடமைகளை இழந்தனர்.   உள்நாட்டு போரினால், ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர்.  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட  அகதிகள் தமிழ்நாட்டில் வந்தனர். தமிழக அரசினால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில்  68 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3உள்நாட்டு போரில் இந்தியாவில் தஞ்சமடைந்த அகதிகளை திரும்ப கொண்டு வரவேண்டும் என்று  ஈழ அகதிகளுக்கான புனரமைப்பு சங்கம் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இது பற்றி விவாதிப்பதற்காக  அதிபரின் செயலாளர் சமான் ஏகநாயகே தலைமையில் ஆலோசனை கூட்டம்  அதிபர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில்  அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அகதிகளை அழைத்து வருவதற்காக ஒரு குழுவை அமைக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டார்.  அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவின் கூடுதல் செயலாளர் சண்டிமா விக்கிரமசிங்கே தலைமையில்  குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணை துாதரக  அலுவலகம் இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று அதிபர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*வெளிநாடுகள் விசாரிக்க எதிர்ப்புஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டம் வரும் 12ம் தேதி முதல் அக்டோபர் 7ம்  தேதி வரை ஜெனிவாவில் நடக்கிறது.  இக்கூட்டத்தில் உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை  வெளிநாட்டு  அமைப்புகள் மூலம் விசாரிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்றும் அது நாட்டின் அரசியல் சட்டத்தை மீறியதாகும் என்று இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். …

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டம்..!!

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: சீனர்கள் இருவர் உயிரிழப்பு!!

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலி!