தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளில் துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சி துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து மாநகராட்சிகளிலும் இன்று மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் அந்தந்ந மாநகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். * சென்னை மாநகராட்சி துணை மேயராக மகேஷ்குமார் பதவியேற்றார். மகேஷ்குமார்-க்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.* தாம்பரம் மாநகராட்சி துணை மேயராக திமுக வேட்பாளர்  கோ.காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். * நாகர்கோவில் திமுக போட்டி வேட்பாளரான ராமகிருஷ்ணனை தோற்கடித்து மேரி பிரின்சி துணை மேயரானார். * சேலம் மாநகராட்சி துணை மேயராக சாராதா தேவி வெற்றி பெற்றார். * கோவை மாநகராட்சி துணை மேயராக வெற்றிச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். * திருச்சி மாநகராட்சி துணை மேயராக திவ்யா தனக்கோடி வெற்றி பெற்றுள்ளார். * கும்பக்கோணம் மாநகராட்சி துணை மேயராக தமிழழகன் போட்டியின்றி வெற்றிப் பெற்றார். * மதுரை துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நாகராஜன் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி நாகராஜன் தேர்வானார்.  * ஈரோடு துணை மேயராக திமுகவின்செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார். எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி செல்வராஜ் தேர்வானார். * திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயராக திமுக வேட்பாளர்  ராசப்பா தேர்வு செய்யப்பட்டார்.* காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக காங்கிரஸ் வேட்பாளர் குமரகுருநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். * கடலூர் மாநகராட்சி துணை மேயராக விமுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தாமரைச் செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.* திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக சிபிஐ வேட்பாளர் பாலசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார்.* கரூர் மாநகராட்சி துணை மேயராக திமுக வேட்பாளர் சரவணன் தேர்வு செய்யப்பட்டார்.* திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயராக திமுக வேட்பாளர் கே.ராஜூ தேர்வு செய்யப்பட்டுள்ளார். * ஆவடி மாநகராட்சி துணை மேயராக மதிமுக வேட்பாளர் சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். * சிவகாசி மாநகராட்சி துணை மேயராக திமுக வேட்பாளர் விக்னேஷ் பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். * வேலூர் மாநகராட்சி துணை மேயராக திமுக வேட்பாளர் சுனில்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். * தஞ்சை மாநகராட்சி துணை மேயராக திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை மேயர் தேர்தலில் திமுக – 15, காங்கிரஸ் – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். துணை தலைவர்கள் தேர்தல் ஒத்திவைப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் துணை தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவும் அபாயம் காரணமாக இந்த முடிவு என சின்னசேலம் தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்தார். பூந்தமல்லி நகராட்சி தலைவருக்கான தேர்தல் ஒத்திவைப்பட்ட நிலையில், துணைத் தலைவருக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3வது வார்டு உறுப்பினர் ஸ்ரீதரன் திடீரென மயக்கமடைந்ததால் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் நகராட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் பேரூராட்சி துணைத் தலைவருக்கான தேர்தலும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் வாக்காளர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை