தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சேலம்: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார். சேலத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முதல் பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 75 சதவீதம் மக்களுக்கு பணியாற்றும் துறையாக நகராட்சி நிர்வாகத் துறை உள்ளது. கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,000கோடி, நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.400 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.876 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார். தமிழ்நாட்டில் சாலைகள், வடிகால், பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மின்மயானங்கள் அமைக்க கடந்த ஆண்டு 75 இடங்களும், நடப்பாண்டில் 7 இடங்களும் தேர்வு செய்யப்பட்டன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்….

Related posts

திமுக இளைஞர் அணி செயலாளராக 6வது ஆண்டு கட்சிப்பணியில் உறுதுணையாக நிற்பவர்களுக்கு உதயநிதி வாழ்த்து: மக்கள் பணி தொய்வின்றி தொடர அழைப்பு

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்