தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்  24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு அறிவித்துள்ளார். சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா (ஐயப்பன்) திருக்கோயிலில் மண்டல பூஜை இன்று முதல் டிசம்பர் 27ம் தேதி வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 27 முதல் ஜனவரி 14 வரை நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து  சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது….

Related posts

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மாவட்டத்தில் புதிதாக 4,644 குடியிருப்புகள் கட்டப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

போதை பொருள் விற்பனை செய்த வாலிபருக்கு 12 ஆண்டு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்த சோதனைகளில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்: 1200 இ-சிகரெட்டுகளும் பிடிபட்டன