சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் நவ.25 தொடங்கி 26,27 ஆகிய நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 26,27-ல் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. …