தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி தர மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் உறுதி : அமைச்சர் துரைமுருகன்

டெல்லி : மேகதாதுவில் தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி அணை கட்ட முடியாது என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட திட்டமிட்ட அம்மாநில அரசு அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், குடிநீர் திட்டம் என்ற பெயரில் கர்நாடக அரசு பணிகளை முடுக்கி விட்டு இருந்தது. இந்த நிலையில், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-ஐ தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்ட விவரங்கள் குறித்து பேட்டி அளித்த துரைமுருகன், ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெறாமல் மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டியுள்ளதாக புகார் தெரிவித்ததாக கூறினார். மேகதாதுவை பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகம் அணை கட்ட முடியாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி அளித்திருந்தாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும் முல்லைப் பெரியாறு அணை அருகே பேபி அணை கட்டுவதை கேரள அரசு வேண்டுமென்றே தடுப்பதாக கூறிய துரைமுருகன், பேபி அணையை வலுப்படுத்தினால் தான் முல்லை பெரியார் அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்க முடியும் என்பதை ஒன்றிய  அமைச்சரிடம் எழுத்துக் கூறியதாக தெரிவித்தார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு