தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயத் துறையில் நீர் மேலாண்மைக்கான ஆராய்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கு

 

கோவை, டிச.3: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையம் கோவை மற்றும் சென்னை மத்திய நிலத்தடி நீர் வாரியம் இணைந்து விவசாயத் துறையில் நீர் மேலாண்மைக்கான ஆராய்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவரது தனது உரையில், ‘சமூகப் பொருளாதார அம்சங்கள் பற்றிய விவசாயிகளின் கருத்துக்கள் உட்பட பல காரணிகள், விவசாயத்தில் தண்ணீர் எவ்வளவு திறமையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துரைத்தார்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் குறிப்பாக விவசாய நீர் செயல்திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும். நீர் மேலாண்மையில் துரிதப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவது பற்றிய நவீன ஆராய்ச்சி நடத்த முறையான காரணிகளை கண்டுபிடித்தல் நமது முதன்மை குறிக்கோள் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எமிரிட்டஸ் விஞ்ஞானி முனைவர் கே. பழனிசாமி, மத்திய நிலத்தடி நீர் வாரிய இயக்குநர் எம்.சிவக்குமார், முதன்மை விஞ்ஞானி முனைவர் தயாமலர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செ.பழனிவேலன், கோவை மண்டலம் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சு.சிவலிங்கம், தமிழக விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்