தமிழ்நாடு வங்கி உருவாக்க கோரி புதுகையில் தர்ணா போராட்டம்

 

புதுக்கோட்டை, ஆக.29: மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும். மாவட்ட, நகரக் கூட்டுறவு வங்கி எனத் தரம்பிரிக்காமல் அனைத்து ஊழியர்களுக்கும் 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்திட வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்