தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்: சட்ட மசோதா தாக்கல்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர்  தா.மோ.அன்பரசன் சட்டசபையில் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: குடிசைப் பகுதிகளை அகற்றுவதற்குப் பதிலாக அந்தப் பகுதியை  மேம்படுத்தி, அவற்றை ஏற்புடைய வாழ்விடமாக மாற்றும் நோக்கத்தில் அரசு  செயல்படுகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட  மேம்பாட்டு வாரியம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தத்தை  மேற்கொள்வதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாக்களும், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு வசம் ஒப்படைப்பதற்காக ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சட்ட மசோதாவும் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டன….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை