தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு கடலூர் எம்எல்ஏ உள்ளிட்டவர்கள் பங்கேற்பு

தென்காசி, நவ. 10: தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழுவின் தலைவரும் அரசு கொறடாவுமான கோவி செழியன் தலைமையில் நடந்தது. எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன், சூலூர் கந்தசாமி சேந்தமங்கலம், பொன்னுசாமி, விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் சதன்திருமலைக்குமார், தென்காசி பழனிநாடார், மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கோரிக்கை மனுக்கள் குறித்து குழுவினர் கட்டளை குடியிருப்பு பூலாங்குடியிருப்பு சாலை இலத்தூர், நயினாரகரம் அப்துல்கலாம் தெரு, சங்குபுரம் பகுதி சாம்பவர் வடகரை பேரூராட்சி வித்தன்கோட்டை கிராமம், தென்காசி நகரத்தின் மையப்பகுதியிலுள்ள சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கட்டளை குடியிருப்பு – பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து செங்கோட்டை நகராட்சி மூலம் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குழுவினர் தெரிவித்தனர். செங்கோட்டை வட்டம் இலத்தூர் கிராமம் பெரியகுளத்தில் பழுதடைந்துள்ள மடைகளை சீரமைப்பது குறித்தும் தென்காசி மாவட்டம் நயினாரகம் ஊராட்சி – அப்துல்கலாம் தெருவில் மின்விளக்குகள் அமைப்பது குறித்தும் சிமெண்ட் சாலை வாறுகால் வசதிகள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம்
அறிவுறுத்தினர். யானை மிதித்து உயிரிழந்த வீரகாளை என்பவரின் மனைவி பூங்கொடிக்கு ரூ.50000- நிவாரணத் தொகைக்கான காசோலையை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் தலைவரும் அரசு கொறடாவுமான கோவி செழியன் வழங்கினார்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்