தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 லட்சம் வீடு கட்ட ரூ.3,954 கோடி ஒதுக்கீடு

சென்னை: பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: * அடுத்த பத்தாண்டு காலத்திற்குள் குடிசைகளற்ற மாநிலமாக மாற்றும் வகையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 லட்சம் வீடு கட்ட ரூ.3954 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.* புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள், மதுரை, கோவை, திருப்பூர் பகுதி, வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும்.* நகர்ப்புற ஏழைகளுக்கான மொத்த வீட்டுவசதித் தேவை 9,53,446 குடியிருப்புகள், வீடுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்காக ரூ.3,954.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.* உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வலுவூட்டும் திட்டம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் உறைவிட மேம்பாட்டு திட்டம் ஆகியவை ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இரண்டாவது தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வலுவூட்டும் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் விரைவில் மேற்கொள்ளப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், நகர்ப்புற ஏழை மக்களுக்கு பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைத்திருக்கக்கூடிய அனைவருக்குமான வீட்டுவசதித் திட்டத்தின் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன.  வீட்டுவசதி துறையில், உலக வங்கித் திட்டங்களுக்கு 320.40 கோடி ரூபாய் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டத்திற்கு ரூ.171 கோடி எனவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை