தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமாக மைதானம் வாங்க நடவடிக்கை புதுகை அடுத்த கீரனூர் ஆரோக்கிய அன்னை ஆலய தேரோட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 24: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இரவில் நடைபெற்ற சப்பர தேரோட்டம், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆரோக்கிய அன்னை சொரூபம் வீற்றிருக்க மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கை முழங்க ஏராளமானோர் சப்பரத்தை இழுத்து வழிபாடு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாள் முதல் தினசரி திருப்பலிகளும் கூட்டு வழிபாடு பிரார்த்தனைகளிலும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு வெகு விமர்சியாக நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித ஆரோக்கிய அன்னை சொரூபத்தை எழுந்தருள செய்து வான வேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஏராளமானோர் சப்பரத்தை இழுத்து வழிபட்டனர். மேலும் சப்பரதேரானது ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. மேலும் இந்த சப்பர தேர் திருவிழாவில் சாதி மதங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதன் பிறகு ஆலயத்தில் கூட்டு வழிபாடு பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை