தமிழ்நாடு காகித ஆலையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

 

வேலாயுதம்பாளையம், ஜூன் 14: கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. குழந்தைகளை கல்வி பயில வேண்டிய பருவத்தில் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலும், அவர்களை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள நிர்வாக அலுவலக கட்டிடத்தில் உறுதிமொழி ஏற்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் துணை பொது மேலாளர்( வனம்) ஜெயக்குமார், முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார், முதுநிலை மேலாளர்( மனித வளம்) வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

Related posts

திருமங்கலத்தில் பரிதாபம் தனியார் மருத்துவமனையில் ஊசி போட்ட சிறுமி பலி போலீசார் விசாரணை

ஆவணங்களின்றி வந்த சரக்குகள் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.8.04 லட்சம் அபராதம்

கோவை மாவட்டத்தில் செயல்படும்; சட்டவிரோத செங்கற்சூளைகளை ஆய்வு செய்ய குழு