தமிழ்நாடு இசைக் கல்லூரியில் பரத நாட்டியம், குரலிசை, யோகா, ஓவியம் பயிற்சி

 

கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் தமிழ்நாடு இசைக் கல்லூரியில் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு நாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் ஆகிய கலைகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. இது குறித்து கோவை கலைபண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மலுமிச்சம்பட்டியில் தமிழ்நாடு இசைக் கல்லூரியில் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் அவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றத்தில் வரும் மே 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பரத நாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முடிந்தவுடன் நிறைவு நாள் அன்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியை குறித்து மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள 9751528188 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்