தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தகவல் அறியும் உரிமைசட்டம் விழிப்புணர்வு பதாகை திறப்பு

 

திருச்சி, அக்.6: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 விழிப்புணர்வு வாரமாக அக்.5ம் தேதி முதல் 12ம் வரை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் விழிப்புணர்வு பதாகை திறந்து வைக்கப்பட்டது.

கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், பணிமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படுகிறது. வருகிற 8ம் தேதி காலை கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், வருகிற 9ம் தேதி கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 தொடர்பான நிபுணர்கள் மூலம் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் நாளான நேற்று விழிப்புணர்வு பதாகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் இளங்கோவன், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜன், துணை மேலாளர் கணேசன், உதவி மேலாளர் நாகமுத்து ஆகிய அலுவலர்களும் ஓட்டுனர்கள் நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை