தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் அண்ணா..! கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் அண்ணா சிலைக்கு தீ வைத்த செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் அண்ணா சிலைக்கு தீ வைத்த செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு: ‘தமிழ்நாடு’ என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையைக் கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் கொடூர எண்ணம் கொண்டோர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது.  அமைதி தவழும் தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைக்கும் சக்திகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு ஜனநாயக ஆயுதத்தால் நிச்சயம் தண்டிப்பார்கள். அண்ணாவின் பெயரை லேபிளாகக் கொண்ட அடிமைக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் சிலைகள் மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் நிறுவனரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன.  இத்தகைய வன்முறைப் போக்கை ஒடுக்க வக்கின்றி, எதிர்க்கட்சிகளை வக்கணை பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் போக்கு வெட்கக்கேடானது என அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு