தமிழிசை மூவரில் ஒருவரான அருணாசல கவிராயருக்கு தில்லையாடியில் மணிமண்டபம்

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில் உள்ள அருணாசலக்கவிராயர் இயல், இசை, நாடக மன்றத்தின் வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு மன்ற தலைவர் ராசமாணிக்கம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ், பொதுநல சங்க முன்னாள் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற நிறுவனர் வீராசாமி, செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். ஊரட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் தமிழன்பன் வரவேற்றார். விழாவில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், மன்றத்தின் வெள்ளி விழா மலரை வெளியிட்டார். அதனை மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், தமிழறிஞர் வீதி.முத்துக்கணியன் மற்றும் தமிழ்சான்றோர்கள் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக மெய்ளர் மாங்குடி பாலசுந்தரி, காரைக்கால் முதியோர் இல்ல நிறுவனர் கேசவசாமி ஆகியோருக்கு வழங்கி பேசியதாவது: தமிழிசை மூவரான அருணாசலக்கவிராயர், மாரிமுயியல் துறை தலைவர் நல்லசிவம், மன்ற விருதை நாதஸ்வர கலைஞர் திருமெய்ஞானம் ராமநாதன், எழுத்தாத்தாப்பிள்ளை, முத்து தாண்டவர் ஆகியோர் தமிழிசைக்கு அடிப்படையாக விளங்கக் கூடிய கீர்த்தனைகளை இயற்றினர். பிற்காலத்தில் கர்நாடக இசை உள்ளிட்ட பல சங்கீத முறைகள் தோன்றுவதற்கு இவர்களின் தமிழிசை மூலங்களே காரணம். 16ம் நூற்றாண்டுக்கு முன்னர் கர்நாடக இசைக்கென்று தனித்து வரலாறு கிடையாது.

ஆனால் தமிழிசைக்கு 2 ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருக்கிறது. உலகிலுள்ள எந்த வகை இசை மரபுக்கும் அடிப்படையாக இருப்பது தமிழிசை என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழிசைக்கு பெருமை தேடித்தந்த அருணாசலக்கவிராயர் தில்லையாடியில் பிறந்தவர் என்ற அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும். அருணாசலக்கவிராயரின் புகழை, தமிழிசைப் பங்களிப்பை பரப்ப வேண்டும், இவ்வூரில் அருணாசலக் கவிராயருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. அதுபோல் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்துக்கு அருகில் அருணாசலக்கவிராயருக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். விழாவில் துணைத் தலைவர் ஆனந்தன், ஏழிசை இசை ஆய்வக நிறுவனர் கலைவாணி, கல்லூரி பேராசிரியர்கள் தமிழ்வேலு, தேவகி, மயிலாடுதுறை திருக்குறள் பேரவை தலைவர் சிவசங்கரன், பொறையார் உடற்கல்வி இயக்குநர் பிரபாகர், அரசு பள்ளி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், தமிழ்ச்சான்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல் மீனவர்கள் கோரிக்கை

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்