தமிழறிஞர்களுக்கு விருது வழங்கல்

திருச்சி: கோவிந்தம்மாள் தமிழ்மன்ற 28வது ஆண்டு விழா மன்றத்தலைவர் கவிஞர் கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. திருச்சி மகளிர் தனிச்சிறை கண்கானிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் முருகானந்தத்துக்கு நற்றமிழ் மாமணி விருதையும், லால்குடி முத்துராமகிருஷ்ணனுக்கு நற்பணி மாமணி விருதினையும் வழங்கினார். விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தவச்செல்வம், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், தொழிலதிபர் மனோகரன், தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து முனைவர் அருணாசலம் தலைமையில் கல்லுாரி மாணவர்கள் பிரபு, காருண்யா, சண்முகவள்ளி, சிரிநிதி, ஆபிராமி ஆகியோர் கலந்து கொண்ட சொல்லரங்கமும், வல்லநாடன் கணேசன் தலைமையில் ஜெயலட்சுமி, லட்சுமி, செசிலி, கார்த்திகா, வைகை மாலா ஆகியோரின் கவியரங்கமும் நடந்தது.

 

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?