தமிழக வீரர்கள் பங்கேற்கும் உலக தடகளம் இன்று ஆரம்பம்

ஓரிகான்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 18வது தொடர் அமெரிக்காவின் ஓரிகான்  நகரில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 10நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி ஜூலை 24ம் தேதி முடிகிறது. இதில் இந்தியா உட்பட 192நாடுகளைச் சேர்ந்த 1972 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்கா ஒன்றியம் சார்பில் 177 பேர் கலந்துக் கொள்கின்றனர். அதற்கு அடுத்து ஜெர்மனியில் இருந்து 88 பேரும், கிரேட் பிரிட்டனில் இருந்து 81 பேரும் களம் காணுகின்றனர். அதற்கு அடுத்து 4வது இடத்தில் ஆஸ்திரேலியா, மிகச்சிறிய தீவு நாடான ஜமைக்காவில் இருந்தும் தலா 65 பேர்கள் பங்கேற்க உள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ்  சோப்ரா உட்பட இந்திய ஒன்றியத்தில் இருந்து 21பேர் கொண்ட பட்டியல் உறுதியாகி உள்ளது. அணியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இடம் பெற்றுள்ளனர். தடை தாண்டி ஓட்டம்(4X400 ) அமோஜ் ஜேக்கப் காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதில் தமிழக வீரர்  ஆரோக்கிய ராஜீவ் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஐஸ்வர்யா  மிஸ்ராவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்தியர்கள் பங்கேற்கும் போட்டிகள் 2வது நாளான நாளை முதல் நடைபெறும். …

Related posts

சில்லிபாயிண்ட்…

பாகிஸ்தான் – இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

சீனா ஓபன் டென்னிஸ் கோகோ காஃப் சாம்பியன்