தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சிறுவாணி அணையில் நீர் திறப்பை அதிகரித்தது கேரள அரசு!!

சென்னை: தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சிறுவாணி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை கேரள அரசு அதிகரித்துள்ளது. கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் சிறுவாணி அணையில் தேங்கும் தண்ணீரின் அளவை கேரள அரசு குறைத்தால் கோடைக்கு போதுமான நீரை சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் தண்ணீரை வெளியேற்றும் குழாய் வால்வுகளும் குறைவான அளவில் திறக்கப்பட்டதால் விநியோகமும் பாதிப்பை எட்டியது. இதனையடுத்து சிறுவாணி அணையின் நீர் தேக்க அளவு மற்றும் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, வலியுறுத்தினார். கேரள முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு, சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு திறக்கப்படும் நீரின் அளவை அதிகரித்து நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக சிறுவாணி அணையில் 49 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 12 மணி முதல் 101.4 எம்.எல்.டி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 49.5 அடியாக உள்ள நிலையில், தற்போது 12 எம்.எல்.டி. அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் திறப்பு அதிகரித்துள்ளது. தனால் கோவை நகரில் தலைகாட்ட தொடங்கிய குடிநீர் தட்டுப்பாடு முற்றிலுமாக நீங்கும் சூழல் உருவாகியுள்ளது….

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு