தமிழக முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர் : நெல்லையில் சுவாமி நாராயணதீர்த்தர் பேட்டி

நெல்லை: தமிழக முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர் என  இமாலய கங்கோத்ரி காளிகாம்பா  பீடம் சுவாமி நாராயண தீர்த்தர் தெரிவித்தார்.தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நெல்லை வந்த அவர் அளித்த பேட்டி: கடந்த 2018ம் ஆண்டு நெல்லையில்  நடந்த தாமிரபரணி புஷ்கரத்தில் பங்கேற்றேன். தற்போது மீண்டும் நெல்லைக்கு  வந்துள்ளேன். தமிழகத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஆட்சி மாற்றம், காட்சி  மாற்றம் நடந்துள்ளது. அதில் பல நன்மைகளும் நடந்துள்ளன. ஆன்மீகத்தில்  நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. தமிழகத்தில் ராஜராஜ சோழன், சேரர்கள்,  பாண்டியர்கள் அதிக கோயில்களை அமைத்துள்ளனர். அதனை பாதுகாப்பது நமது  கடமை.  தமிழக முதல்வர்  அனைவருக்கும் பொதுவானவர். அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும்  என இந்து மதம் வலியுறுத்துகிறது. இதனால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும். இந்துக் கோயில்கள் மூலம் பெறப்படும்  வருமானத்தை இந்து ஆலய மேம்பாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்….

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை