தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம்: தமிழக மீனவ பிரதிநிதிகளுடன் இலங்கை அமைச்சர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை..!!

நாகை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வரும் நிலையில் மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த பிரச்சனைக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய 4 மாவட்ட மீனவர்களின் பிரதிநிதிகள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கும் நேரத்தில் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களும், அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். எதிகாலத்தில் இதுபோன்று பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இரு நாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                …

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை