தமிழக மீனவர்கள் அத்துமீறலை தடுக்க கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியாவுக்கு இலங்கை யோசனை

கொழும்பு: தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தனது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டும் இலங்கை கடற்படை, அவர்களின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர்கள் பலமுறை கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, ‘இந்தியா – இலங்கை கூட்டு செயற்குழு’ அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, கடைசியாக கடந்த மாதம் காணொலி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இது தொடர்பாக விவரங்களை இலங்கை மீன்வளத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, இருநாட்டு கடல் எல்லையில் இருநாட்டு கடற்படைகளும் கூட்டாக ரோந்து செல்லலாம்’ என்ற புதிய யோசனையை தெரிவித்துள்ளது. அது மேலும் தனது அறிக்கையில், ‘விடுதலைப் புலிகள் தங்களின் ராணுவ நோக்கங்களுக்காக தமிழக மீனவர்களை பயன்படுத்தியதால் வடக்கு, கிழக்கு மாகாண கடல் பகுதிகளில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போதும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சட்டரீதியான  நடைமுறைகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர்,’ என்றும் கூறியுள்ளது….

Related posts

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

கனடாவில் 2 முறை நிலநடுக்கம்

பாம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அதிரடி கைது