தமிழக பக்தர்கள் ஒரே நாளில் ரூ10 கோடி நன்கொடை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு அறக்கட்டளைகள் செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரே நாளில் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக ரூ10 கோடியை பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர். இதில்  திருநெல்வேலியைச் சேர்ந்த பக்தர்கள் மட்டும் ரூ7 கோடியை தலா ரூ1 கோடி என ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை,ஸ்ரீவெங்கடேஸ்வரா பசு பாதுகாப்பு அறக்கட்டளை, பாலாஜி மாற்றுத்திறனாளிகளுக்கான அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனம் (பர்டு), ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பாதுகாப்பு அறக்கட்டளை,ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்ன பிரசாத அறக்கட்டளை, ஸ்ரீவெங்கடேஸ்வரா சர்வ ஸ்ரேயஸ் அறக்கட்டளை,  வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சிக்கு  நன்கொடையாக வழங்கினர். மேலும் வெங்கடேஸ்வரா வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ1 கோடியும், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆலய நிர்மானம் அறக்கட்டளைக்கு ரூ1 கோடியும், வெங்கடேஸ்வரா பாரம்பரிய கோயில் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு ரூ1 கோடியும் திருநெல்வேலியை சேர்ந்த சில தனியார் நிறுவனங்கள் வழங்கி உள்ளன. …

Related posts

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு