தமிழக காங்., தலைவர் கீழே விழுந்து காயம்

சிதம்பரம், ஜூலை 29: நடை பயிற்சின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கீழே விழுந்து காயமடைந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருப்பணிநத்தம் கிராமத்தில் உள்ள வீட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராமல் கீழே விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிதம்பரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது இடுப்பு பகுதியில் ஜவ்வு பாதிக்கப்பட்டுள்ளதும், மேலும் இடது முழங்கால், நெற்றிப்பகுதியில் சிறு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருப்பணிநத்தம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு