தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் : திமுக வெளிநடப்பு!!

புதுடெல்லி:தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய கூட்டத்தின்போது, அது குறித்து விவாதிக்க அனுமதிக்காததால், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் அந்த மசோதாவை திரும்ப அனுப்பி வைத்தார்.இதையடுத்து மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு, நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை அவர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். சமீபத்தில் பட்ஜெட் பதில் உரையில் பேசிய போது  நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.  இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறார். இந்த பரபரப்பான சூழலில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் வழங்கி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க  கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்க 197 விதியின் கீழ் அதிகாரம் உள்ளது.  இந்த விதியைப் பயன்படுத்தி இன்றைய தினம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர் பாலு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்பப்பெற வேண்டுமென கவன  ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அகில இந்திய மருத்துவ  கல்விக்கான நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க  கோரி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அவை ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு  மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி இருந்தார்.இந்நிலையில்  சமீபத்தில் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டு அதிலும்  மீண்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு  ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், நீட் தேர்வில் விலக்கு அளிக்க  கோரி தமிழக அரசு ஆளுநரிடம் வழங்கிய மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு  கிடைக்கப் பெறவில்லை எனவும் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெற்றால்  தான் அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என உள்துறை அமைச்சகம்  தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் நீட் உள்ளிட்ட 3 மசோதாக்கள்  கிடப்பில் வைத்துள்ள தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும்  அவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் திமுக மக்களவை  உறுப்பினரும் குழு தலைவருமான டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.இந்நிலையில்,  ஆளுநரை திரும்பற பெற வேண்டும், நீட் தேர்வு குறித்த சட்டமன்ற தீர்மானத்தை  குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இப்போது இதுபற்றி விவாதிக்க முடியாது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். …

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…