தமிழக கடல் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது

சென்னை: தமிழக கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும்  ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை 45 நாட்கள்  மீன்பிடி தடைகாலமாக இருந்து வந்தது. இந்த தடைகாலத்தில் மீன்கள்  முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை  தமிழக விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைகாலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு  உள்ளது. அதன்படி, இந்த  ஆண்டின் தடை காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால், மீன்கள் விலை உயரக்கூடும். இதுகுறித்து மீன்வளத்துறை உதவி  இயக்குனர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், ‘‘கிழக்கு கடல் பகுதியில் திருவள்ளுவர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி  மாவட்டம் வரை மீனவர்கள் இன்று (14ம் தேதி) நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை