தமிழக எல்லையை நெருங்கும் சசிகலா; அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக காவல்துறை எச்சரிக்கை

ஜூஜூவாடி: அதிமுக கொடியுடன் சசிகலா தமிழகம் வந்தால் நடவடிக்கை உறுதி என துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி, அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். ஆனாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்கள் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார். இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து இன்று காலை அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக எல்லையை நெருங்கி வருகிறார். இதனிடையே அதிமுக கொடியுடன் சசிகலா தமிழகம் வந்தால் நடவடிக்கை உறுதி என துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக கொடியை காரிலிருந்து அகற்ற ஜூஜூவாடி எல்லையில் சசிகலாவுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்க உள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் சசிகலா அவர்கள் பயணிக்கும் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும். அகற்றாவிட்டால் சசிகலா அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் அடுத்த இடத்தில் கொடி கட்டாயமாக அகற்றப்படும் மேலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!