தமிழக எல்லையில் விட்டுச் செல்கிறார்கள்

 

மேட்டூர், செப்.11: மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக கொளத்தூர் ஒன்றியத்தில் சித்திரப்பட்டிபுதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, வெள்ளக்கரட்டூர் பகுதிகளில் சிறுத்தை அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கால்நடை வளர்ப்பை கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடக வனப்பகுதியில் பிடிபடும் சிறுத்தையை, கர்நாடக வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்டு செல்கின்றனர். அதேபோல் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் சுற்றித்திரியும் காட்டுபன்றிகளை நூற்றுக்கணக்கில் பிடித்து வரும் கர்நாடக வனத்துறை, தமிழக கர்நாடக எல்லையான பாலாறு வனப்பகுதியில் விட்டுச் செல்கின்றனர்.

தற்போது அவர்கள் விட்டுச்சென்ற வனவிலங்குகள், கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதோடு, அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன. கர்நாடக வனத்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்கு உரியது. கர்நாடக வனத்துறையினர் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் கொளத்தூர் ஒன்றிய மக்களை திரட்டி இரு மாநில எல்லையான பாலாற்றில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சதாசிவம் எம்எல்ஏ தெரிவித்தார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்