தமிழக அறநிலையத்துறை தலைமையகமான ஆணையர் அலுவலகத்தில் 12 பேருக்கு கொரோனா: அதிகாரிகள், ஊழியர்கள் அச்சம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் நிர்வாகத்தை கண்காணிப்பது, அசையும், அசையா சொத்துக்களை கவனிப்பது, திருப்பணி, வழக்குகள், தணிக்கை, நகைகளை சரிபார்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது. இதில், ஆணையருக்கு உதவியாக, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர், கண்காணிப்பாளர், ஆய்வர், உதவியாளர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கெரோனா 2வது அலை தீவிரமாக பரவி வந்தாலும் கூட அரசு அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்கள் பணிபுரிவதால் இந்த கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதன் காரணமாக அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர், உதவியாளர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பில் தொகையை செட்டில் செய்வது மற்றும் கோயில்களில் வரவு, செலவு கணக்குளை கவனிக்கும் இ பிரிவில் பணியாற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இதை தொடர்ந்து இ பிரிவு அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், இ பிரிவு வளாகத்தில் கிருமி நாசினி தெளித்து ஒரு வாரத்துக்கு மூட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வர அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது, ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு பயந்து ஊழியர்கள் ஒரு வித பயத்துடன் தினமும் அலுவலகத்திற்கு வருகின்றனர். தலைமை அலுவலகமான அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், பணி நிமித்தமாக உயரதிகாரிகளை சந்திக்க அத்துறையின் கீழ் உள்ள அதிகாரிகள் வர தயக்கம் காட்டுகின்றனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்