தமிழக அரசை விமர்சிக்கும் சீமானுக்கு கண்டனம்: செங்கை பத்மநாபன் அறிக்கை

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தீவிரவாதிகளுக்கு மத சாயத்தையோ மத பலத்தையோ தந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்களுடைய ஆதரவை கொண்டிருப்பதை போல் செயல்படும் தீவிரவாதிகளின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு அவர்களை மதத்தோடு தொடர்புபடுத்தாமல் தனிமைப்படுத்தவேண்டும்.தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் இஸ்லாமிய மக்களின் மவுனத்தை தீவிரவாதிகள் சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.  புரிதலற்று அரசியல் முதிர்ச்சியற்று எதிலும் சுயநலத்துடன் பிரிவினையை தூண்டும் சீமான், இஸ்லாமியர்களை கவர்வதாக நினைத்து கொண்டு, தமிழக அரசு தந்த அனுமதியை விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்….

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்