தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மேலும் 1 வாரம் பொதுமக்கள் பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பொதுமக்கள், மாணவர்களின் கோரிக்கையை மூன்று அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்கு மேலும்  ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 26ம் ேததி நடந்த குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில்  தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திர போராட்ட  வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின்  அணிவகுப்பு நடந்தது. அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள்  கண்டுகளிக்கின்ற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 26ம் தேதி ஊர்திகளை  சென்னை, தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டின்  பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள  இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில்  சென்னை மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே  பொதுமக்களின் பார்வைக்கு கடந்த 20ம் தேதி  முதல்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ,  மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பெரும்திரளாக இந்த அலங்கார  ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 21ம் தேதி  இந்த ஊர்திகளைப் பார்வையிட்டு அங்கு பெரும்திரளாக கூடியிருந்த மாணவ  செல்வங்களுடன் கலந்துரையாடினார்.  சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள்,  மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் முதல்வர்களுக்கு விடுத்த கோரிக்கையை  ஏற்று, மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் இந்த அலங்கார ஊர்திகள்  காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு