தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2, குரூப்2 ஏ பதவியில் 5529 பணியிடங்களுக்கு மே 21ல் தேர்வு.! சுமார் 9 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு

சென்னை: குரூப் 2, குரூப்2 ஏ பதவியில் காலியாக உள்ள 5529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு மே 21ம் தேதி நடக்கிறது. சுமார் 9 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)குரூப்-2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 பணியில்(நேர்முக தேர்வு பதவி) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் -11 இடங்கள், நன்னடத்தை அலுவலர்-2, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்-19, சார் பதிவாளர்(கிரேடு 2)- 17, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி)-8, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு உதவியாளர்-1, காவல் ஆணையரகம் நுண்ணறிவு பிரிவில் தனி பிரிவு உதவியாளர் -15, குற்றப்புலனாய்வு துறை சிறப்பு பிரிவில் தனிப்பிரிவு உதவியாளர் -43 இடங்கள் என மொத்தம் 116 இடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் நகராட்சி ஆணையர்(கிரேடு 2)-9 இடங்கள், தலைமை செயலகம் உதவி பிரிவு அலுவலர்- 11,  முதுநிலை ஆய்வாளர்-291, இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் 972 இடங்கள் என 67 துறைகளில் 5 ஆயிரத்து 413 இடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 529 இடங்கள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மார்ச் மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு மே மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவர்கள் அடுத்து மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள்(10ம் வகுப்பு தரம்) 100 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) 300 மதிப்பெண்ணுக்கும் கேட்கப்படும். நேர்முகத்தேர்வு உள்ள பணிகளுக்கு நேர்முகத்தேர்வு 40 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மேலும் முழு விவரங்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.in பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு சுமார் 9 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது