தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் அரசு நிலம் ஆக்கிரமிப்பு

* அதிகபட்சமாக சென்னையில் 23% சதவீதம் போலி *  சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்புசென்னை: சட்டப்பேரவையில் நிதி, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பண்ருட்டி வேல்முருகன் (தமிழ்நாடு வாழ்வுரிமை  கட்சி) பேசியதாவது:கடந்த ஆட்சியில் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சதுப்பு நிலக்காடுகள் தனிநபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஒரு நாள் எங்கள் மாவட்டத்துக்கு வாருங்கள். ஒரு நாள் 1 மணி நேரம் ஒதுக்கினால் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்து அறநிலையத்துறை சொத்துகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அது மீட்கப்படும். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: நான்கரை லட்சம் ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக பிரித்து பார்த்தால், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒன்னரை சதவீதம், இரண்டு சதவீதமும், சென்னை மாவட்டத்தில் 23 சதவீதமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மூர்த்தி: தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் மூலமாகவும் பதிவு செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்றைக்கு போலியாக யார் எல்லாம் ஆவணங்கள் பதிவு செய்து இருக்கிறார்களோ, அதை எல்லாம் ரத்து செய்வதற்கு பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் வழங்குவதற்காக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறோம். எனவே, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து இருக்கக்கூடிய அத்தனை பத்திரங்களும் ரத்து செய்யப்படும். அமைச்சர் சி.வி.கணேசன்: ஈரோடு, நாமக்கல்,  திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற அந்த சாய தொழிற்சாலைகளில் ஆற்றில்  கலப்பதை தவிர்க்கும் வகையில் பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி: போலி பத்திரப்பதிவை தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கை எடுத்தார். அமைச்சர் மூர்த்தி: எதிர்க்கட்சி தலைவர் கூறியது இப்போது 9ம் தேதியில் இருந்து தான் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். அவர் சொன்ன மாதிரி எதுவும் இல்லை. கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: 1996ம் ஆண்டே ஆட்சியில் விற்பவரும், வாங்குபவரும் கட்டாயம் பத்திர பதிவு அலுவலகத்துக்கு வர வேண்டும் என்பதை சட்ட வடிவமாக்கியவர் கலைஞர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்