தமிழகம் முழுவதும் 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா வெளியிட்டுள்ள உத்தரவு:  செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஆஞ்சலோ இருதயசாமி கடலூருக்கும், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த அனிதா ராணிப்பேட்டைக்கும், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ராமகிருஷ்ணன் ஈரோட்டுக்கும், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ரோஸ் நிர்மலா செங்கல்பட்டுக்கும், தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த என்.கீதா கோவைக்கும், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த செந்திவேல்முருகன் தேனிக்கும், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்து முருகன் சேலம் மாவட்டத்துக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த முனுசாமி வேலூருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆறுமுகம் திருவள்ளூருக்கும், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த கபீர் தென்காசிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த கே.பி.மகேஸ்வரி கிருஷ்ணகிரிக்கும், இந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த பாலமுரளி திருச்சிக்கும், நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த புகழேந்தி, கன்னியாகுமரிக்கும், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த அய்யண்ணன் திருப்பத்தூருக்கம், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மதிவாணன் நாகப்பட்டினத்திற்கும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக விஜயலட்சுமி கள்ளக்குறிச்சிக்கும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த சத்தியமூர்த்தி புதுக்கோட்டைக்கும், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த மதன்குமார் கரூருக்கும், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த மதன்குமார் தர்மபுரிக்கும், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த பாலமுத்து நாமக்கல்லிற்கும், தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கருப்பசாமி, திண்டுக்கல்லிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா, சென்னைக்கும், தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த சுபாஷினி ராமநாதபுரத்திற்கும், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள வெற்றிச்செல்வி சென்னை நிர்வாக துணை இயக்குநராகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக உள்ள அருள்செல்வம் காஞ்சிபுரத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திற்கும், திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த அறிவழகன் பெரம்பலூருக்கும், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள சிவக்குமார் தஞ்சாவூருக்கும், திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக உள்ள மார்ஸ் சென்னை முதன்மை கல்வி அலுவலராகவும், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த பாலதண்டாயுதபாணி தூத்துக்குடிக்கும், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக இருந்த திருவளர்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், இந்தப் பதவியில் இருந்த பூபதி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், பள்ளிக்கல்வி ஆணையரக துணை இயக்குநர் முத்துக்கிருஷ்ணன் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர் மகேஸ்வரி, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் குணசேகரன், பள்ளிக் கல்வி ஆணையரத்தின் துணை இயக்குநராகவும், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்