தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்க : தமிழக அரசுக்கு உத்தரவு!!

சென்னை : தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடியிருப்பு நிலங்களாக வகை மாற்றம் செய்ய ஏற்கனவே தடை உள்ள நிலையில், அந்நிலத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கே அதற்குரிய பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக வாதிட்டார். மேலும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், மக்கள் தொகை அதிகரிப்பு, வேலைவாய்ப்புக்காக புதிய தொழிற்சாலைகள் துவங்குவது போன்றவற்றிற்கு மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பயன்படுத்துவதற்கு  விலக்களிக்கப்படுவதாகவும், இருந்த போதிலும் இந்த மனு சம்பந்தமாக விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மக்கள் தொகை அதிகரித்து வருவதால், குடியிருப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும், நிலங்களின் தேவை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினர்.ஆகவே நீண்டகால திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எடுத்த நடவடிக்கை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு