தமிழகம் முழுவதும் நடைபெற்ற 20வது தடுப்பூசி முகாமில் 10.17 லட்சம் பயனாளிகள்: மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும்  முதல்வர் உத்தரவின்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் இதுவரை 19 மெகா கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. இதன் மூலம், 3 கோடியே 46 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கும் திட்டம் 10ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. அதன்படி நேற்று வரை மொத்தம் 3,80,570 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 20வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 வயதிற்கு மேற்பட்ட 10,17,919 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2,55,902 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 7,27,417 பயனாளிகளுக்கும் மற்றும் 34,600 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 90.30% முதல் தவணையாகவும் 68.66% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் கோவிலம்பாக்கம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமினை நேரடி கள ஆய்வு செய்தார். மேலும் நேற்று நடைபெற்ற 20வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு இன்று கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என்று மருத்துவத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு